உள்நாடுபிராந்தியம்

மீன்பிடிக்கச் சென்ற நபர் நீரில் மூழ்கி மரணம்

செவனகல பகுதியில் ஹபுருகலை போதிராஜா குளத்தில் மூழ்கி நபரொருவர் உயிரிழந்தார்.

செவனகல மஹகம பகுதியைச் சேர்ந்த 42 வயதான நபரே சம்பவத்தில் மரணித்தார்.

குறித்த நபர் மற்றொரு நபருடன் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஒரு குழியில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து செவனகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

போராட்டங்களே என் அரசியல் வாழ்வாக மாறிவிட்டது – ரிஷாட்

அனுமதியற்ற நிரமாணிப்புகளுக்கு இனிமேல் இடமில்லை – அரச அதிகாரிகள், முப்படையினர் செய்து வரும் பணிகளுக்கு நன்றி – ஜனாதிபதி அநுர

editor

எதிர்காலத் திட்டங்கள் குறித்து விசேட கவனம் – பிரதமர் ஹரிணி

editor