உள்நாடு

மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து – காணாமல் போயிருந்த மீனவர்களின் சடலங்கள் மீட்பு

களுத்துறை, பேருவளை, மொரகல்ல பகுதியில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில், காணாமல் போயிருந்த இரண்டு மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.

பெந்தோட்டை கடற்கரையில் மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (28) காலை மீன்பிடிக்கச் சென்றிருந்த போது அவர்கள் இந்த விபத்திற்கு முகம் கொடுத்திருந்தனர்.

இறந்தவர்கள் அளுத்கம பகுதியைச் சேர்ந்த நதுன் குமார மற்றும் அவரது சகோதரர் துமிந்த நதுன் குமார என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் காணாமல் போயிருந்த நிலையில், பிரதேசவாசிகள் படகுகள் மூலம் அவர்களைத் தேடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கீரி சம்பாவை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் வசந்த சமரசிங்க

editor

சற்றுமுன் புதிதாக 9 பேருக்கு கொரோனா

உலக வங்கியிலிருந்து கிடைக்கும் 160 மில்லியன் டொலர்கள் எரிபொருளுக்காக செலுத்த கவனம்