வணிகம்

மீன் இறக்குமதியைக் குறைப்பது தொடர்பாக ஜனாதிபதி ஆலோசனை

(UTV|கொழும்பு) – மீன் இறக்குமதிக்காக ஆண்டுதோறும் செலவிடப்படும் அந்நிய செலாவணியைக் குறைப்பது தொடர்பில் உரிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, மீன், கருவாடு, மாசி மற்றும் தகரத்தில் அடைக்கப்பட்ட மீன் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்காக ஆண்டுதோறும் சுமார் 500 மில்லியன் டொலர்களை செலவிடுவதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் உள்ளூர் நன்னீர் மீன்களை இனப்பெருக்கம் செய்து ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிகளவு அந்நிய செலாவணியைப் பெற்றுக்கொள்வதற்கு சாத்தியம் காணப்படுவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நுகர்வோர் அதிகார சபை களத்தில்

சந்தையில் முட்டை விலையில் அதிகரிப்பு

எயார்டெல் மற்றும் NIMH இலங்கையின் முதலாவது Chatlineஐ அறிமுகம் செய்கின்றன