சூடான செய்திகள் 1

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

(UTV|COLOMBO)-தென் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக காணப்படும் குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 48 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து வடக்கு – வடமேற்கு திசையில் தமிழ்நாடு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மீனவ சமூகமும் கடலில் பயணம் செய்வோரும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடுவதுடன் ஓரளவு குளிரான வானிலையும் எதிர்பார்க்கப்படுகின்றது.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

 

 

 

 

Related posts

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் செயலாளர் கைது செய்யப்படவில்லை

ரயன் வென்ருயன் மீண்டும் விளக்கமறியலில்

டீ.ஆர் விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்றில் தீர்ப்பரவல்