அரசியல்உள்நாடு

மீண்டும் மின்சாரக் கட்டணம் அதிகரித்தால் நாம் மக்களுடன் வீதிக்கு இறங்குவோம் – சஜித் பிரேமதாச

அரசாங்கம் நாட்டு மக்களுக்கு நற்செய்தியொன்றை வழங்க தயாராகி வருகின்றது. மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதே அந்த நற்செய்தியாகும். இந்த மின்சாரக் கட்டண அதிகரிக்கப்படக் கூடாது என்றே பிரார்ததிக்கிறோம்.

அரசாங்கம் ஏதோ ஒருவகையில் மின்சாரக் கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால், ஐக்கிய மக்கள் சக்தியினரான நாம், மக்களுடன் வீதிக்கு இறங்குவோம்.

இதற்கு எதிராக நாம் வீதியில் இறங்கி நடவடிக்கை எடுப்போம். மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் வீட்டுப் பொருளாதாரத்தில் தாய்மார்களும் பெண்களும் தான் பாதிக்கப்படுபவர்களாக காணப்படுகின்றனர்.

துன்பம், பசி, அடக்குமுறை மற்றும் அசௌகரியத்தால் மக்களை நசுக்கி, என்றுமே மக்களை அநாதவரவான நிலையில் வைத்துக் கொள்வதற்கு எடுக்கும் அரசாங்கத்தின் இந்த மோசமான கொள்கைகளை தோற்கடிக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

220 இலட்சம் மக்களினது உரிமைகளைப் பாதுகாக்க மக்கள் முன்வர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் பிரதிநிதிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் அங்கத்தவர்களுக்கு பயிற்சிகளை வழங்கும் நோக்குடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை செயலகத்தில் மேன்மை தங்கிய டி.எஸ். சேனநாயக்க அரசியல் கற்கைகள் பீடத்தின் திறப்பு விழா, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினது பங்கேற்புடன் இன்று (11) இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் கற்கைகள் பீடமான இது, பதிவு செய்யப்பட்ட சகல வசதிகளையும் கொண்டமைந்து ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இதன் பிரகாரம், ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களுக்கான விசேட பயிலரங்கும் இன்று இங்கு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் சாமிந்த்ராணி கிரியெல்ல, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான புத்திக பத்திரன மற்றும் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமது உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்வர்

ஐக்கிய மக்கள் சக்தியின் தற்போதைய சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்து, மாகாண சபைத் தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக போட்டியிடத் தயாராக உள்ளனர்.

இந்த தியாகங்களைச் செய்து மாகாண சபைத் தேர்தலில் கட்சியை வெற்றி பெறச் செய்ய இவர்கள் தயாராகவுள்ளனர்.

ஆளும் தரப்பு உறுப்பினர்கள் இதற்கு முன்பு இதுபோன்ற செயல்களைச் செய்திருந்தாலும், எதிர்க்கட்சியிலிருந்து இதுபோன்ற ஒன்று நடப்பது அரிது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

2020 பெப்ரவரி இல் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தொலைபேசி சின்னத்தின் கீழ் இதுவரை இரண்டு பொதுத் தேர்தல்களிலும், ஒரு ஜனாதிபதித் தேர்தலிலும், உள்ளூராட்சித் மன்றத் தேர்தலொன்றிலும் போட்டியிட்டுள்ளது.

இன்று, ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு 1773 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் (ஆண்-பெண்) காணப்படுகின்றனர்.

இவர்களில் 714 பேர் பெண்கள் ஆவர். கட்சியின் ஆரம்பம் தொட்டு, அன்றிலிருந்து இவர்கள் செய்த நன்கொடைகள் மற்றும் தியாகங்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இலங்கையில் இரண்டாவது கூடிய எண்ணிக்கையிலான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சக்தியே கொண்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் சிறுவர்களினது உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உலகலாவிய மற்றும் இலங்கையிலும் சட்டங்கள், ஒழுங்குமுறைகள் மற்றும் விதிகள் காணப்படுகின்றன.

பெரும்பாலான பெண்கள் இது குறித்து அறியாதவர்களாக காணப்படுகின்றனர். இந்த சட்ட திட்டங்கள் குறித்த தெளிவை பெற்றுக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

தகவல் தொழிநுட்பம் மற்றும் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்ற எதிர்கால தலைமுறையினரை உருவாக்க வேண்டும் என நான் பேசும்போது என் மீது சேறு பூசுகின்றனர்.

உண்மை எப்போதாவது வெல்லும். அதனால் சேறு பூசும் விதமாக என்ன கதைகளை கூறினாலும் அது குறித்து நான் அதிகம் யோசிப்பதில்லை.

முடிந்தவரை ஓர் விடயத்தில் குறித்த விடயதான அறிவை தெளிவை பெற்று செயல்படுமாறு நான் இங்குள்ள சகல உள்ளூராட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகளிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

மக்களின் பிரச்சினைகளுக்காக முன்நிற்கும் பிரதிநிதிகளாக நீங்ஙள் அனைவரும் திகழ வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

நேற்று பாராளுமன்றத்தில் உயர்தரம் படிக்கும் பாடசாலையொன்றின் மாணவர்களைச் சந்தித்தபோது, ​​பாடசாலையில் அரசியலமைப்பின் பிரதிகள் இருக்கிறதா என்று வினவிய சமயம், தங்கள் நூலகத்தில் அத்தகைய பிரதிகள் இல்லை என்று சொன்னார்கள். கல்வியில் காணப்படும் ஏற்றத்தாழ்வு என்பது இதுதான்.

இதுதான் நாட்டின் யதார்த்தம். இந்நிலை மாற வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதிக்கும் கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு

editor

முன்னாள் அமைச்சர் மயோன் முஸ்தபா காலமானார்!

பாதுகாப்பு சட்டமூலத்தை உடனடியாக திரும்பப் பெறு – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்.