உள்நாடு

மீண்டும் மழை அதிகரிக்கும் சாத்தியம்

இலங்கைக்கு கிழக்கே வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் தளம்பல் நிலை ஒன்று உருவாகி வருவதன் காரணமாக, வரும் நாட்களில் நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடுவதுடன், சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகள்

தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை உலகம் இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை -பாலஸ்தீனிய பத்திரிகையாளர்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உயிரோட்டத்தைக் காட்சிப்படுத்துகிறது