வகைப்படுத்தப்படாத

மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் நவாஸ் ஷெரிப்

(UTV|PAKISTAN)-பனாமா ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரக பாதிப்பும், அதை தொடர்ந்து நெஞ்சு வலியும் ஏற்பட்டது.

இதனால் உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் அறிவியல் மருத்துவ நிறுவன மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையை தொடர்ந்து, கடந்த 2 நாட்களாக நவாஸ் ஷெரிப்பிற்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதில், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் அறிவித்தனர்

எனவே,, மருத்துவமனையில் இருந்து அவரை மீண்டும் சிறைக்கு மாற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர். இந்த தகவலை சிறையில் இருந்த நவாஸ் ஷெரிப்பின் மகள் மற்றும் மருமகனுக்கு தெரிவிக்கப்பட்டது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

F1 bosses to consider refuelling return

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்

One-day service of Persons Registration suspended for today