உள்நாடு

மீண்டும் எகிறும் மின்கட்டண சுமை

(UTV | கொழும்பு) – மின் கட்டணம் வசூலிக்கும் போது தபால் துறைக்கு வழங்கப்படும் 2 சதவீத கமிஷன் தொகையை மின் வாரியம் நிறுத்தியுள்ளதால், ஒவ்வொரு மின் கட்டணத்திற்கும் வாடிக்கையாளரிடம் இருந்து 20 ரூபாய் கூடுதலாக வசூலிக்க தபால் மா அதிபர் சுற்றறிக்கை மூலம் தபால் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கட்டணப் பட்டியல்களை வசூல் செய்து மின்சார வாரியத்திற்கு அனுப்ப தபால் நிலையங்களின் செயல்பாடுகளுக்காக இந்த வசூல் செய்யப்படுவதாக தபால் துறை கூறுகிறது.

இதனால் மின்கட்டணம் தொடர்பான பணத்துடன் அஞ்சலகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் செய்வதறியாது திண்டாடுவதாகவும், மின்கட்டணத்தை நிலுவையுடன் செலுத்துவதாகவும் தபால் நிலைய அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

புதிய பதில் தலைமை நீதிபதி நியமிப்பு

வடக்கில் 7 பேரின் மரணத்திற்கு எலி காய்ச்சல் காரணம்

editor

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்க மொட்டுவின் ஒரு குழு தீர்மானம்