உள்நாடு

மீண்டும் எகிறும் கொரோனா – முகக் கவசங்கள் கட்டாயமாகிறது

(UTV | கொழும்பு) – தற்போதைய கொவிட்-19 வைரஸ் நிலைமையைக் கருத்தில் கொண்டு மீண்டும் முகமூடிகளை அணியுமாறு கடுமையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன விடுத்துள்ள அறிவிப்பில், வீட்டு வளாகங்கள், பொது இடங்கள் மற்றும் பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் போது முகமூடிகளை அணியுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சட்டமாக அமுல்படுத்தப்படாவிட்டாலும் சகல மக்களும் முகக் கவசம் அணிவது இன்றியமையாதது என சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் நேற்று 75 பேர் கொவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

Related posts

சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களை நாடும் பொலிஸார்

வேட்பு மனுவில் கையொப்பமிட்டார் திலித் ஜயவீர

editor

கண்டியில் இரு பிரதேசங்கள் விடுவிப்பு