சூடான செய்திகள் 1

மீண்டும் இன்று கூடுகிறது பாராளுமன்ற தெரிவுக்குழு

(UTV|COLOMBO)  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகான பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் இன்றையதினம் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி முன்னிலையாகவுள்ளார்.

இன்று பிற்பகல் 2 மணிக்கு, அதன் பதில் தலைவர் பாராளுமன்ற  உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்னவின் தலைமையில் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று கூடுகிறது.

அசாத் சாலிக்கு மேலதிகமாக அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் தலைவர் எம்.ஐ.எம். ரிஸ்வி மௌலவி மற்றும் காத்தன்குடி முஸ்லிம் பள்ளிவாசல் சங்கத்தின் தலைவர் உள்ளிட்டவர்களும் இன்று வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்டுள்ளனர்.

 

Related posts

வட மேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை

“அடித்து வளர்த்தாட்டிவிட்டேன்” சாய்ந்தமருது கொலையின் முழு விபரம்!

ஐஸ் ரக போதை பொருளுடன் இரண்டு பேர் கைது