சூடான செய்திகள் 1

இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ள ரயில் பொதி சேவை

(UTV|COLOMBO) ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலின் பின்னர் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரதம் மூலமான பொதி சேவை  இன்று (01) முதல் மீண்டும் ஆரம்பமாவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டு கடந்த 22 ஆம் திகதி முதல் புகையிரதம் மூலம் பொதிகளை கொண்டுசெல்லும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
பொதிகளை பொறுப்பேற்கும் ரயில் நிலையங்களில் பொதிகளை சோதனையிடுவதற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தில் பறக்க விடப்பட்ட சிவப்பு கொடி

காசல்ரீ நீர் தேக்கத்தில் 1 லட்சம் கிராப் மீன் குஞ்சிகள் விடப்பட்டது

‘பிரதம நீதியரசருக்கு தான் கடிதம் அனுப்பவில்லை-சபாநாயகர்