உலகம்

மியன்மார் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50 தொழிலாளர்கள் பலி

(UTV|மியன்மார் )- மியன்மாரில் பச்சை மரகதக்கல் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50 தொழிலாளர்கள் உயிரிலந்துலதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அங்கு பெய்த கடும் மழை காரணமாக நிலப்பகுதி ஈரமாக இருந்ததால், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்த அனர்த்தத்தில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 50 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

Related posts

ஜனாதிபதியின் கொலையை தொடரும் பதற்றமும்

மீண்டு வா இந்தியா : துபாய் புர்ஜ் கலீபா கட்டிடங்களில் இந்தியக் கொடி

உயிரினங்கள் வாழும் சாத்தியங்களுடன் புதிய கோள் கண்டுபிடிப்பு

editor