உலகம்

மியன்மாரில் நிலநடுக்கம்

மியான்மார் நாட்டில் இன்று அதிகாலை 1.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில், 3.6 ஆக பதிவாகி உள்ளது.

இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்ட தகவல் தெரிவித்து உள்ளது.

இந்நிலநடுக்கம் அசாமில் இருந்து 133 கி.மீ. தென்கிழக்கே திப்ரூகார் நகரில், 73 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இதேபோன்று நேற்று (5-ம் திகதி ) நள்ளிரவும் 12.16 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில், 3.7 ஆக பதிவாகி இருந்தது.

இந்நிலநடுக்கம் மிசோரம் மாநிலத்தில் இருந்து 84 கி.மீ. கிழக்கு வடகிழக்கே சம்பை நகரில், 88 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

கடந்த 3ம் திகதி காலை 9.54 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அது மணிப்பூர் மாநிலத்தில் இருந்து 48 கி.மீ. கிழக்கு தென்கிழக்கே உக்ருல் நகரில், 90 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

மியான்மாரில் சுனாமி பாதிப்பு உள்பட மித மற்றும் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட கூடிய வாய்ப்புகள் அதிகம் என கூறப்பட்டுள்ளது .

Related posts

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் : பலியானோர் எண்ணிக்கை 4,200 ஆக அதிகரிப்பு.

ரஷ்யாவில் 49 பேருடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது

editor

மேலும் 4 வாரங்களுக்கு ஊரடங்கு நீடிப்பு