அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

மின்சாரம் திருத்தச் சட்டமூலம் 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் 96 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம் இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் 96 மேலதிக வாக்குகளால் இன்று (6) பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

இன்று மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இதில், சட்டமூலத்திற்கு ஆதரவாக 121 வாக்குகள் பதிவாகியதுடன், இதற்கு எதிராக 25 வாக்குகளும் பதிவாகின.

இதனைத் தொடர்ந்து குழு நிலையில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு மூன்றாவது மதிப்பீடு திருத்தங்களுடன் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.

இதற்கு அமைய இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் 96 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

Related posts

PANDORA PAPERS : இலங்கையர்கள் குறித்து விசாரணை ஆரம்பம்

இன்று முதல் நான்காவது டோஸ் தடுப்பூசி

ஒரு வீரனைப் போல இந்த நாட்டை ரணில் பொறுப்பேற்றார் – மஹிந்த அமரவீர

editor