உள்நாடுபிராந்தியம்

மின்சாரம் தாக்கி இருவர் பலி – மட்டக்களப்பில் சோகம்

மட்டக்களப்பு – கரடியனாறு, புளியவெளி பகுதியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை (29) இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் பன்குடவெளி மற்றும் ஏறாவூர் பகுதிகளை சேர்ந்த 47 மற்றும் 48 வயதுடைய ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் என தெரியவந்துள்ளது.

நெல் வயல்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்பட்ட அங்கீகரிக்கப்படாத மின்சார கம்பி தாக்கியதில் அவர்கள் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கரடியனாறு பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஹட்டன் பிரதான வீதியில் மண் சரிவு – போக்குவரத்து பாதிப்பு!

இலங்கை தமிழரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு ? எனக்கு எதுவும் தெரியாது – மாவை சேனாதிராஜா

editor

தற்காலிக ஜனாதிபதி நியமிக்கப்படவில்லை : சபாநாயகர் அலுவலகம்