உள்நாடு

மின்சார சபைக்கு எரிபொருளை பெற்றுக் கொள்வது குறித்து இன்று விசேட கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை பெற்றுக் கொள்வது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

நிதியமைச்சு, மத்திய வங்கி, மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட பல தரப்பினரும் இதில் இணைந்து கொள்ளவுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திடம் இருந்து எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியுமா என்பது தொடர்பில் ஆராயுமாறு மின்சார சபையின் தலைவர் மற்றும் மின்சக்தி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

நான் செய்த தவறுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் – அர்ச்சுனா எம்.பி

editor

சுற்றாடல் அமைச்சில் வைக்கப்பட்டிருந்த யானை தந்தங்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்த அமைச்சர் விஜித ஹேரத்

editor

“அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்” அமைக்க ரணில் நிதி ஒதுக்கீடு!