உள்நாடு

மின்சார சபை 8,200 கோடி ரூபா இலாபம் : மின் கட்டணத்தை 20 சதவீதம் குறைக்க பரிந்துரை

நாட்டில் மின் கட்டணத்தை மேலும் 20 சதவீதம் குறைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மின்சார சபையில் கடந்த மூன்று மாதங்களில் 8,200 கோடி ரூபா இலாபம் ஈட்டியுள்ளது.

இந்த நிலையில், பொருளாதார நெருக்கடியைக் குறைப்பதற்காக துறைசார் மேற்பார்வைக்கான நாடாளுமன்றக் குழுவானது மின் கட்டணத்தை மேலும் 20 சதவீதம் குறைக்க பரிந்துரைத்துள்ளது.

மேலும், மின்சார சபைக்கு கிடைத்த இலாபத்தைக் கருத்தில் கொண்டு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் மின்சார சபை என்பன உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழுவின் தலைவர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் மக்களின் பொருளாதார சிரமங்களை ஓரளவு குறைக்க முடியும் எனவும், கடந்த வருடம் மின்சார சபையின் திரட்சியான இலாபம் 6000 கோடி ரூபா எனவும், 2024 ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் பெறப்பட்ட 5,100 கோடி ரூபாவையும் சேர்த்து 2024 மார்ச் 31 ஆம் திகதி வரை 8,200 கோடி ரூபா இலாபமாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் குழு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

தொடர்ந்தும் 6 மாவட்டங்களுக்கு ஊரடங்கு சட்டம் நீடிப்பு

ஜெனிவா பிரேரணையால் எமது நாட்டு இராணுவ வீரர்களுக்கு ஆபத்து – சரத் வீரசேகர

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியிலிருந்து வெளியேறினர்!

editor