உள்நாடுசூடான செய்திகள் 1

மின்சார கம்பியில் சிக்கி இரண்டு பேர் உயிரிழப்பு

உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவிக்குட்பட்ட அம்பாகஹா சந்திக்கருகிலுள்ள வயலில் சட்டவிரோதமாக விரிக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி இன்று (12) இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் உரகஸ்மன்ஹந்திய பகுதியைச் சேர்ந்த 39 மற்றும் 46 வயதானவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

அங்கீகரிக்கப்படாத மின்சார கம்பிகளைப் பொருத்தியதாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

காசா நிதியத்திற்கு, 40 மில்லியனை வழங்கிய பேருவளை மக்கள்

இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயம்

அனைத்து விதமான ரயில் சேவைகளும் இரத்து