உள்நாடு

மின்கட்டணத் திருத்தம் இன்று அறிவிக்கப்படும்

இவ்வருடத்தின் 3ஆவது மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்றையதினம் (14) அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மின் கட்டண திருத்தம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் நேற்று நிறைவு பெற்றுள்ளதாகவும் அந்த வகையில் மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (14) வெளியிடப்படும் என்றும இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தகவல் தொடர்பு பிரிவு பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றையதினம் மு.ப. 10.30 மணிக்கு இது தொடர்பான அறிவித்தலை மேற்கொள்ளும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மின்சாரக் கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக நாட்டின் 9 மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட பொதுமக்கள் கருத்துக் கோரலின் போது 500 இற்கும் மேற்பட்டோர் அதில் பங்கேற்று கருத்துகளை தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட யோசனைகள் கிடைத்துள்ள நிலையில், அவை யாவும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சாதகமான யோசனைகள் ஆய்வு செய்யப்பட்டு, மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இன்றைய தினம் அறிவிக்கப்படும் என்றும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தகவல் தொடர்புப் பிரிவு பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மன்னாரில் வெள்ளப் பாதிப்பு – தொடர்ந்தும் களத்தில் நிற்கும் ரிஷாட் எம்.பி

editor

அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவின் தலைமையில் மாத்தளை மாவட்ட பொது மருத்துவமனை மேம்பாட்டுத் திட்டங்கள் ஆரம்பம்

editor

பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீக்கிரை – மட்டக்களப்பு பெண்களுக்கு உடனே உதவி வழங்கிய அமைப்பு

editor