உள்நாடுசூடான செய்திகள் 1

மின் துண்டிப்பு குறித்து வௌியான தகவல்

நாளை (13) அமுல்படுத்தப்படும் மின் விநியோக துண்டிப்பு குறித்து நாளை காலை அறிவிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் தற்போது மீட்டெடுக்கப்பட்டு வருவதால், மின் விநியோக துண்டிப்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையமும் செயலிழந்தது.

இதன் விளைவாக, தேசிய மின் கட்டமைப்பு சுமார் 300 மெகாவாட் மின்சாரத்தை இழந்தது.

எனவே, நேற்று (11) மற்றும் நேற்று முன்தினம் (10) மின் விநியோக துண்டிப்பு அமுல்படுத்தப்பட்ட நிலையில், பௌர்ணமி தினம் காரணமாக இன்று (12) மின் விநியோக துண்டிப்பு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சார சபை அறிவித்துள்ளது.

Related posts

புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவிப்பிரமாணம்

மருதானை டீன்ஸ் வீதி நகர மண்டப வீதியில் போக்குவரத்து தடை

பூரணமாக குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 293 ஆக உயர்வு