உள்நாடு

மின் கட்டண பட்டியலில் அதி கூடிய தொகை தொடர்பில் அவதானம்

(UTV |கொவிட் 19) – தற்போது மின் பாவனையாளர்கள் பலருக்கு வழங்கப்பட்டுள்ள மின் கட்டண பட்டியலில் அதி கூடிய தொகை குறிப்பிடப்பட்டிருப்பது கவனக் குறைவினால் ஏற்பட்ட ஒன்று என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தகவல் வெளியிட்ட அவர், அதி கூடிய கட்டணங்கள் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மின்சார சபையின் கவனயீனத்தினாலேயே இந்த தவறு நடந்துள்ளது. எனவே அவ்வாறு வழங்கப்பட்டுள்ள மின் கட்டண பட்டியல்களை திருத்தி மீள வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக தேசியப்பட்டியல் எம்.பி கிடைக்கும் – ரிஷாட் எம்.பி நம்பிக்கை!

editor

இரண்டாம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்குள் நுழையத் தடை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

editor