உள்நாடு

 மின் கட்டண திருத்தம் தொடர்பில் புதிய தகவல்

(UTV | கொழும்பு) –  மின் கட்டண திருத்தம் தொடர்பில் புதிய தகவல்

மின் கட்டண திருத்தம் தொடர்பாக அமைச்சரவை எடுத்த முடிவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு உட்படுத்துவதாக? இல்லையா? என்பது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 17 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மின் நுகர்வோர் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் நீதி மையம் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று (13) சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது, மின்சார சபை உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், மின் கட்டண திருத்தம் தொடர்பான அமைச்சரவை முன்மொழிவுகளை நீதிமன்றில் முன்வைத்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்றம், முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்து, சம்பந்தப்பட்ட மனுவை விசாரிக்க உட்படுத்துவதாக? இல்லையா? என்று 17ஆம் திகதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளமாய் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சஷி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு!

editor

அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை தொடர்வதற்கு கடன் வசதி

அதிகரிக்கப்படும் புலமைப்பரிசில் தொகை!