உள்நாடு

மிதிகம ருவனின் நெருங்கிய சகா துப்பாக்கிகளுடன் கைது!

வெலிகம மற்றும் மிதிகம இடையேயான பகுதிகளில் நேற்று (24) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது ரி-56 துப்பாக்கிகள் மூன்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான ‘மிதிகம ருவனின்’ நெருங்கிய சகா என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைத்த தகவலின்படி, கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் கட்டுமானத்தில் உள்ள இரண்டு மாடி வீட்டின் மேல் மாடியில் நடத்தப்பட்ட சோதனையின்போது இந்த துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மூன்று ரி-56 துப்பாக்கிகளுக்கு மேலதிகமாக, 1 மெகசின் மற்றும் 30 தோட்டாக்களையும் கைப்பற்றினர்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 38 வயதுடைய தச்சுத் தொழிலாளி என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

2024 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வி தவணை ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிப்பு!

அரசியலமைப்பின் 22வது திருத்தம் இன்று பாராளுமன்றத்தில்

காதலர் தினத்தை முன்னிட்டு பொலிஸாரின் விசேட அறிவிப்பு

editor