உள்நாடுபிராந்தியம்

மிதிகம, பத்தேகம பகுதியில் துப்பாக்கிச் சூடு

மிதிகம, பத்தேகம பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (17) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டின் காரணமாக வீட்டின் முன் ஜன்னல் மற்றும் சுவரில் பல தோட்டாக்கள் பாய்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டால் எவருக்கும் பாதிப்பு ஏற்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்திற்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் குறித்து எந்த எவ்வித தகவலும் இதுவரை தெரியவரவில்லை.

சம்பவம் தொடர்பில் மிதிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

கொரோனாவிலிருந்து 28 பேர் குணமடைந்தனர்

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்ட சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுடன் ஜனாதிபதி அநுர கலந்துரையாடல்

editor

IMF பேச்சுவார்த்தைகளுக்கு தொடர்ந்தும் ஆதரவு