கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை உப தபாலகம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் (15) வெள்ளிக்கிழமை 25 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.
மாவடிச்சேனை ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாகவுள்ள கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில் உப தபாலகம் 2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
மாவடிச்சேனை உப தபாலகம் ஆரம்பிக்கப்பட்டு அதன், முதல் உப அஞ்சல் அதிபராக நியமனம் பெற்றுக் கொண்ட அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.அஸ்ரப் இன்று வரை தபாலகத்தை மிகவும் சிறப்பான முறையில் முன்னெடுத்து வருகிறார்.
குறித்த, உப தபாலகம் 2003 ஆண்டு காலப் பகுதியில் இருந்து 2024 ஆம் ஆண்டு காலப் பகுதி வரை மாவட்ட, மாகாண, தேசிய மட்டங்களில் அதிகூடிய வருமானங்களை ஈட்டிக் கொடுத்த உப தபாலகங்களில் முதன்மையானதாக திகழ்கிறது.
அத்துடன், அங்கு சேவையாற்றி வரும் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.அஸ்ரப் தேசியத்தில் உப அஞ்சல் அதிபருக்கான விருதுகளையும் பல முறை பெற்றுள்ளார்.
கணினி மயப்படுத்தப்பட்ட சேவைகளை வழங்கி வரும் உப தபாலகமானது தபாலகமாக தரமுயர்த்தப்பட வேண்டும் என மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.
-எச்.எம்.எம்.பர்ஸான்