உள்நாடு

மாளிகாவத்தையில் ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொலை

(UTV | கொழும்பு) –   மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயந்த வீரசேகர மாவத்தை பகுதியில் இரும்புக் குழாயால் தாக்கப்பட்டு ஒருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் மாளிகாவத்தை மஸ்ஜித் வீதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாய்த்தர்க்கம் காரணமாக இடம்பெற்ற தாக்குதலின் விளைவாகவே இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், தகராறுக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரயில் போக்குவரத்து சேவையில் இருந்து விலக தீர்மானம்

கனேவத்தை ரயில் நிலைய செயற்பாடுகள் வழமைக்கு

ரிஷாட் மீது கொலை முயற்சி தாக்குதல் மேற்கொண்ட மஸ்தானின் அடியாட்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனர் – ஜனாதிபதி சட்டத்தரணி திசத் விஜயகுணவர்தன

editor