உள்நாடுகாலநிலை

மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும், சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், தெற்கு மாகாணத்திலும், மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும்.

தற்காலிகமாக வீசும் பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைக்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

Related posts

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட 21 வயதுடைய பெண் கைது

editor

கொவிட் -19 தடுப்பூசி : 67,615 பேருக்கு சைனோபாம் செலுத்தப்பட்டுள்ளது

யாழில் கடலில் பாய்ந்த இ.போ.ச பஸ்; நடத்துனர் காயம்