சூடான செய்திகள் 1

மாலியில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல்கள் இலங்கைக்கு…

(UTV|COLOMBO)-அமெரிக்க பாலி இராஜ்ஜியத்தில் அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேளை குண்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த இலங்கை இராணுவ வீரர்கள் இருவரின் பூதவுடல் எதிர்வரும் மாதம் 2ம் திகதி இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.

எதிர்வரும் மாதம் 2ம் திகதி பிற்பகல் 3 மணியளவில் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு சொந்தமான சிறப்பு விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வீரர்களின் சடலங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக அதன் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதன்போது , இராணுவ வீரர்களின் சடலங்களுக்கு விசேட இராணுவ மரியாதை செலுத்த இராணுவம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

 

 

 

 

Related posts

ஊரடங்குச்சட்டம் அமுலில்

பிரதமர் நாடு திரும்பினார்…

நடுவானில் தடுமாறிய விமானம்:நிலை பதட்டமடைந்த விமானிகள் (video)