வகைப்படுத்தப்படாத

நெவில் பெர்ணான்டோ மருத்துவமனை அரசாங்கத்தால் பொறுப்பேற்பு

(UDHAYAM, COLOMBO) – மாலபே – சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியுடன் தொடர்புடைய நெவில் பெர்ணான்டோ என்ற தனியார் மருத்துவமனையை அரசாங்கம் இன்று பொறுப்பேற்றுக்கொண்டது.

மருத்துவமனையை அரசாங்கத்துக்கு கையளிக்கும் ஒப்பந்தம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.

மருத்துவர் நெவில் பெர்ணான்டோ மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த மருத்துவமனையில், பொதுமக்களுக்கு சிறப்பான சிகிச்சை பெற்றுக்கொடுக்கவும், சுதந்திரமான வைத்தியசாலையாக நிர்வாக குழுவின் ஊடாக அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக, இந்நிகழ்வில் உரையாற்றிய சுகாதார அமைச்சர ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

Related posts

Kandy’s iron man Niyaz Majeed – a legend in weightlifting

ஹகிபிஸ் புயல் – 8 பேர் உயிரிழப்பு

ஐக்கிய நாடுகள் சபைஇலங்கைக்கு தொடர்ந்து நிதியுதவி