உள்நாடுபிராந்தியம்

மாரவில கடற்கரையில் தலை, கை, கால்கள் இன்றி கரையொதுங்கிய சடலம்

மாரவில முது கட்டுவ கடற்கரையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய மாரவில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கரை ஒதுங்கிய சடலத்தில் தலை, கைகள் மற்றும் கால்கள் எவையும் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீல நிற காற்சட்டையுடன் உடலின் ஒரு பகுதி மட்டுமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

அரச ஊழியர்களுக்கு 05 வருட விடுமுறை

அதிவேக நெடுஞ்சாலையில் இன்றும் விசேட சுற்றிவளைப்புகள்

இலங்கை மக்களிடம் மன்னிப்புக்கோரும் மெத்யூஸ்