உள்நாடு

மாகாணங்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்ட பேரூந்து சேவைகள்

(UTV | கொழும்பு) – மாகாணங்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நாளை (14) முதல் பஸ் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதற்கு COVID – 19 ஒழிப்பு தேசிய செயலணியின் அனுமதி கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதனடிப்படையில், அரச மற்றும் தனியார் பிரிவுகளில் அத்தியாவசிய சேவை நிமித்தம் செல்பவர்கள் மாத்திரமே இவற்றில் பயணிக்க முடியும் என கூறினார்.

அதேநேரம் பயணிகள், அரச அல்லது தனியார் நிறுவனங்களின் அடையாள அட்டை அல்லது தாம் செல்லும் பணி தொடர்பிலான ஆவணத்தை வைத்திருக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

திங்கள் 18 மணித்தியால நீர்வெட்டு

பரீட்சைகளில் கணிப்பான்களை பயன்படுத்த அனுமதியளிக்க தீர்மானம்

இன்று காலை முதல் புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்