உள்நாடு

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளில் இறுக்கம்

(UTV | கொழும்பு) –    மாகாணங்களுக்கு இடையில் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மேலும் இறுக்கமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று(15) ஜனாதிபதி தலைமையில் இணைவழியாக இடம்பெற்ற கொவிட் ஒழிப்புக்கான தேசிய செயலணி கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் வரும் விடுமுறையுடன் ஆரம்பமாகும் நீண்ட விடுமுறையின் காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான எல்லைகளில் கடுமையான சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முச்சக்கர வண்டி சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு ரணிலிடமிருந்து நல்ல செய்தி

காற்றாலை மின் திட்டம் – அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதை காத்திருந்து பார்ப்போம் – முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor

 தரம் 5 மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு தடை !