உள்நாடுவிளையாட்டு

மஹேல ஜயவர்தனவிடம் இன்று விசாரணை நடத்தப்படாது

(UTV|கொழும்பு)- இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹெல ஜயவர்தன விளையாட்டுக் குற்றங்கள் தொடர்பான விசேட விசாரணைப் பிரிவில் இன்று முன்னிலையாக மாட்டார் என குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.

விளையாட்டுத்துறை குற்றங்களை விசாரிக்கும் குழுவில் இன்று முன்னிலையாகுமாறு இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று மஹெல ஜயவர்தன சாட்சியமளிக்க வருகைத்தர மாட்டார் எனவும் எதிர்வரும் நாட்களில் அவரை அழைப்பதாகவும் விசேட விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டி குறித்து வாக்குமூலம் பதிவு செய்யும் வகையிலேயே மஹெல ஜயவர்தன விளையாட்டுக் குற்றங்கள் தொடர்பான விசேட விசாரணைப் பிரிவுக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

லொத்தர் சீட்டு விற்பனை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

மாதங்கள் பல கடந்தும் இன்னும் தீர்க்கப்படாது, வழமைக்கு திரும்பாதிருக்கும் கடவுச்சீட்டுப் பிரச்சினை தொடர்பாக சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்

editor

அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு எதிரான மனு – இன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

editor