உள்நாடு

மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்​கை எதிர்வரும் ஜூன் மாதம் 22 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(17) உத்தரவிட்டுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கீழ் இயங்குகின்ற ஶ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரசின் தலைவராக இருந்த போது அந்த தொழிற்சங்கத்துக்கு சொந்தமான 39 இலட்சம் ரூபா நிதியை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சட்டப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பொதுமக்களின் எதிர்ப்பால் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு இரத்து

அரச வாகனங்களை செப்பனிட்டு பயன்படுத்த அனுமதி

கிண்ணியா நகர சபை தவிசாளர் மீள விளக்கமறியலில்