உள்நாடுசூடான செய்திகள் 1

மஹிந்தானந்தவிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு

(UTV|கொழும்பு) – முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவிடம் விசேட பொலிஸ் பிரிவு ஒன்றின் மூலம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மஹிந்தானந்த அளுத்கமகேவின் நாவலப்பிட்டியில் உள்ள அலுவலகத்திற்கு விசேட பொலிஸ் குழு ஒன்று சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கிரிக்கெட் உலகக்கிண்ண இறுதிப் போட்டி தொடர்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கருத்துத் தெரிவித்திருந்தார்.

மேற்கொண்ட அறிவிப்பு தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஜஸ்டின் ட்ரூடோ: மீண்டும் கனடா பிரதமராகிறார்

தேசபந்து தென்னகோன் நாளை சரண்டைவாரா?

editor

தபால் வாக்களிப்பு தொடர்பான முக்கிய தகவல்