உள்நாடு

மஹிந்தவுக்கு முன், கோட்டபாயவை கடுமையாக தாக்கி பேசிய தேரர்

 

பௌத்தமதகுரு ஒருவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் மற்றுமொரு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை கடுமையா சாடியுள்ளார்.

மகி;ந்த ராஜபக்சமுன்னிலையில் உரையாற்றிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் மிகப்பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்கும் மக்களிற்கும் துரோகமிழைத்தார் என குறிப்பிட்டுள்ளார்.

கோட்டபயவிடம் நிர்வாகத்திறமையிருக்கவில்லை தனக்கு யாரால் நன்மை கிடைக்கும் என கருதினாரோ அவர்களையே கோட்டபய தன்னை சுற்றிவைத்திருந்தார் எனவும் பௌத்மதகுரு தெரிவித்துள்ளார்.

கோ ட்டாபய தவறான பாதையில் செல்கின்றார் என நாங்கள் பல தடவை அவரிடம் தெரிவித்தோம் அதற்காரணமாகவே அவர் வீழ்ச்சியடைந்தார் நாங்கள் இன்று எதிர்கொள்ளும் நிலைமைக்கு அவரின் நிர்வாகத்திறன் இன்மையே காரணம் எனவும் பௌத்தமதகுரு தெரிவித்துள்ளார்.

Related posts

 மேலும் சில பொருட்களுக்கு விலை அதிகரிப்பு

SLPPமுக்கியஸ்தர்களுக்கு அவசர அழைப்பு!

தனக்கு ஓய்வூதியம் சரியாக வழங்கப்படவில்லை – நான் அதை கேட்கவுமில்லை – பஸ்ஸில் செல்வதற்கு எனக்கு வெட்கமில்லை – சந்திரிகா குமாரதுங்க

editor