கிசு கிசு

மஹிந்தவின் வீட்டை கோரும் கோட்டா

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது கொழும்பு 07 இல் உள்ள ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த வீட்டை கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்குமாறு கோரி ஜனாதிபதி அலுவலகத்திற்கு கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஊழியர்கள் இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜேராம மாவத்தையில் உள்ள தனது முன்னாள் இல்லத்தை புனரமைத்ததன் பின்னர் அங்கு செல்லவுள்ளார்.

ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள காலி வீட்டை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்குமாறு கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

Related posts

Youtube செயலிழப்பு-ஹேக்கிங் செய்யப்பட்டதா?

150 பிணங்களுடன் வலம் வரும் லாரி…

பிரபல நடிகையின் படத்தில் தமன்னாவின் கிளாமரான ஆட்டம்…