அரசியல்உள்நாடு

மஹிந்தவின் அடிப்படை உரிமை மனு – விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் படையினரை 60 அதிகாரிகளாகக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை மார்ச் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனு இன்று (06) நீதிபதிகளான பிரீதி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Related posts

அதானி வெளியேற்றம், பெரும் பிழை – மனோ கணேசன் எம்.பி

editor

இஷாராவை போன்ற பெண் ஒருவர் போதைப் பொருளுடன் கைது

editor

இரு தினங்கள் அரச விடுமுறை நாட்களாக அறிவிப்பு