முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நலம் தொடர்பில் விசாரிப்பதற்காக முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தங்காலையிலுள்ள கார்ல்டன் இல்லத்திற்குச் சென்றுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, செப்டம்பர் 11 ஆம் திகதி விஜேராமவில் உள்ள தமது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறினார்.
“ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்குதல் சட்டத்தின் விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் கையளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கிருந்து வௌியேறினார்.
அதன்பின்னர் ஹம்பாந்தோட்டையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு சென்று தங்கியுள்ளார்.
அன்றிலிருந்து, முன்னாள் ஜனாதிபதியை சந்திப்பதற்காக அவரை நேசிக்கும் பல அரசியல்வாதிகள் மற்றும் ஆதரவாளர்கள் கார்ல்டன் சென்று செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.