உள்நாடு

மஹிந்த துபாய்க்கு உத்தியோகபூர்வ விஜயம்

(UTV | கொழும்பு) – உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அடுத்த மாதம் 2ம் திகதி துபாய் செல்லவுள்ளார்.

ஜனவரி 3 ஆம் திகதி துபாயில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விஜயத்தின் போது, ​​பிரதமர் மற்றும் துபாய் அரச தலைவர்களுடன் விசேட பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மீண்டும் நாடு திரும்பிய 223 இலங்கையர்கள்!

மதுபோதையுடன் வாகன செலுத்துபவர்களை கைது செய்ய விசேட நடவடிக்கை

இராஜாங்க அமைச்சர் அருந்திக்கவுக்கு கொரோனா