அரசியல்உள்நாடு

மஹிந்த ஒரு மாவீரர் என ஞானசார தேரர் புகழாரம்

பொதுபல சேனா (பிபிஎஸ்) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட பிக்குகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.

தங்காலையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்தில் அவர்கள் இந்த சந்திப்பை மேற்கொண்டுள்ளனர்.

இச்சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த ஞானசார தேரர்,

“மகிந்த ராஜபக்ச நாட்டின் மறக்க முடியாத ஜனாதிபதி. அவர் நம் வாழ்நாளில் நாம் கண்ட ஒரு மாவீரர்.

இந்த கொரில்லா போரை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்று பலர் கூறிய போதிலும், மகிந்த ராஜபக்ச 30 ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவந்தார்” குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

editor

சுகாதார அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் – நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

editor

ஆசிரியர் நியமனம் வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

editor