உள்நாடு

மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன, துமிந்த மீதான தடை நீடிப்பு

அமைச்சர் மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக அந்த அமைச்சர்களால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடுகள் இன்று (08) அழைக்கப்பட்ட போதே கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த முறைப்பாடுகளில் பிரதிவாதிகளாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, பதில் பொதுச் செயலாளர் சரதி துஷ்மந்த மித்ரபால உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நியாயமான ஒழுக்காற்று விசாரணையின்றி தம்மை கட்சியில் இருந்து நீக்கி கட்சி செயற்குழு எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது எனவும் அதனை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் கோரி சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மாவட்ட நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

Related posts

பரசூட் சாகசம் செய்த இராணுவ தளபதிக்கு பாராட்டு!

தெஹியத்தகண்டி, கல்முனை உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்தல் நடைபெறாது

editor

ஒவ்வொரு மாதமும் கடன், கடன் சேவை விவரங்களை சமர்ப்பிக்க கோரிக்கை