உள்நாடு

மஹாபொல அறக்கட்டளை மோசடி – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணை

(UTV | கொழும்பு) – கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மஹபொல அறக்கட்டளை நிதியிலிருந்து ஒரு பில்லியனுக்கும் அதிகமான ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தியமை குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான பொறுப்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நேற்று (07) பாராளுமன்றத்தில் அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

எவ்வித காலதாமதமும் இன்றி மஹாபொல உதவித்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நிலுவைத் தொகை அனைத்தும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மஹாபொல அறக்கட்டளை நிதியத்தை அபிவிருத்தி செய்ய, ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து புதிய வேலைத்திட்டமொன்று செயற்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மருத்துவ அலட்சியம் : கம்பஹா வைத்தியசாலையில் பிறந்த குழந்தை ஊனமுற்றது

77ஆவது சுதந்திர தினத்தில் தமிழிலும் ஒலித்த தேசிய கீதம் – புதிய அரசின் செயலுக்கு பலரும் பாராட்டு

editor

ரவி உள்ளிட்ட 7 பேருக்கும் விளக்கமறியலில்