உள்நாடுசூடான செய்திகள் 1

மஸ்கெலியா எமலீனாவில் கடும் காற்று : 20 பேர் நிர்கதி

(UTV | கொழும்பு) –

ஆர்.பி.கே.பிலான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா புரவுன்ஷீக் தோட்ட எமலீனா பிரிவில் இன்று மதியம் 2.மணிக்கு கடும் மழையுடன் வீசிய கடும் கன்றின் போது தொழிலாளர்கள் குடியிருப்பு மீது சுமார் 200 அடி உயரம் கொண்ட கருப்பன்டைன் மரம் சரிந்ததால் 4 குடும்பங்களை சார்ந்த 20 பேர் நிர்கதிக்குள்ளானார்கள்.

அங்கு விரைந்த மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார மற்றும் பொலிசார் தோட்ட நிர்வாகம் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து பாரிய மரத்தை வெட்டி அகற்றியுள்ளனர்.

மேலும் அப் பகுதியில் பாரிய மரங்கள் உள்ளதால் நிர்வாகம் நிர்கதிக்குள்ளானவர்களை தனியாக தோட்ட குடியிருப்பு ஒன்றில் தற்காலிக குடியிருப்பு ஒன்றில் தங்கவைத்து உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார். மேலும் மரம் சரிந்த போது குறிப்பிட்ட குடியிருப்பில் இருந்த 70 வயது சிறு காயங்கள் ஏற்பட்டு மஸ்கெலியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.ஏனைய அனைவரும் தெய்வாதீனமாக உயிர் தப்பினார்கள்.

 

மஸ்கெலியா  நிருபர்.செ.தி.பெருமாள்

 

Related posts

வெளிநாட்டு ஆசையால் ஏமாறும் மக்கள் – பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

தெற்காசியாவின் பழமையான மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

பிரான்ஸ் நாட்டுடனான தொடர்புகளை வலுவாக முன்னெடுத்துச்செல்ல இலங்கை ஆர்வம்

editor