உள்நாடு

மழையுடனான வானிலை குறையும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – நாட்டில் இன்று (19) முதல் மழையுடனான வானிலை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

Related posts

மேலும் 4 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் நாட்டிற்கு

வாகன இறக்குமதி இடைநிறுத்தம் -ரஞ்சித் சியம்பலாபிட்டிய.

ஜெய்சங்கரின் பாதுகாப்பு உயர்வு – இலங்கையிலிருந்து உடனே திரும்பிய காரணம் இதுவா?