விளையாட்டு

மழை காரணமாக போட்டி இரத்து

(UTV|INDIA) – இந்தியா-இலங்கை இடையே கவுகாத்தியில் நேற்று(05) நடைபெறவிருந்த முதலாவது இருபதுக்கு – 20 போட்டி மழை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள லசித் மாலிங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட இருபதுக்கு – 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.

இவ்விரு அணிகள் இடையிலான போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சாபாரா மைதானத்தில் நேற்றிரவு 7 மணிக்கு தொடங்கி நடக்க இருந்தது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

ஆனால் ஆட்டம் தொடங்குவதற்குள் மழை குறுக்கிட்டது. இதனால் மழை ஓய்ந்ததும் ஆடுகளத்தை உலர வைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்தியா-இலங்கை மோதும் 2 ஆவது போட்டி இந்தூரில் நாளை(8) இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Related posts

மூன்றுக்கு பூச்சியம் என்ற அடைப்படையில் கைப்பற்றிய பாகிஸ்தான் அணி

Dad’s Army கிண்டலுக்கு பிராவோ பதிலடி

5 விக்கட்டுக்களினால் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி