சூடான செய்திகள் 1

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-நாட்டின் மேற்கு, சப்ரகமுவ, மத்திய ,வடமேல் மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும். சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் 50 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

ஊவா மாகாணத்திலும், அம்பாறை மாவட்டத்திலும் ஒரு சில இடங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

 

அம்பாந்தோட்டை ,மாத்தளை மற்றும் மன்னார் மாவட்டங்களில் 40 தொடக்கம் 45 கிலோமீற்றர் வரையில் காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்றும் வளிமண்டலவியல்  திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மாகாணசபைத் தேர்தல் ஒத்திவைப்பு

மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ்; 186 ஆக உயர்வு

இலங்கை-சீஷெல்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து