வகைப்படுத்தப்படாத

மல்வானை வீடு மற்றும் காணி தொடர்பான தீர்ப்பு இன்று

(UDHAYAM, COLOMBO) – முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமானதாக கருதப்படும் மல்வானையிலுள்ள வீடு மற்றும் காணி தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் பூகொட நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவருகின்றது.

இதற்கிடையில் பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமானதாக கூறப்படும் மல்வானையில் உள்ள வீடு மற்றும் காணியை பொதுமக்கள் தேவைக்காக பயன்படுத்துமாறு சட்டமா அதிபர் குறிப்பிட்டிருப்பதாக காவல்துறையின் நிதி மோசடி விசாரணைப்பிரிவு கடந்த 20 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியிருந்தது.

இதனை அடுத்து, எதிர்வரும் 29 ஆம் திகதி குறித்த வீடு மற்றும் காணி என்பனவற்றை ஏலத்தில் விடப்படவிருந்த நிலையில் அதற்கு நீதவான் தடைவிதித்தார்.

பதினாறு ஏக்கர் விஸ்தீரனமான இந்த காணியின் பெறுமதி இருபது கோடியே எண்பது லட்சம் ரூபாய் என அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.

Related posts

Showers & winds to enhance over south-western areas

காலநிலை

முதல் பெண் ஜனாதிபதியாக சுசானா கபுட்டோவா