உலகம்விசேட செய்திகள்

மலேசியாவில் இருந்து சென்னை சென்ற சரக்கு விமானத்தில் தீ

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு சென்ற சரக்கு விமானம், இன்று (12) ரன்வேயில் தரையிறங்கிய போது திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதையடுத்து விமானியால் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

தக்க நேரத்தில் கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவம் காரணமாக விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

விமானத்தில் இருந்து லேசான புகை வந்தது உண்மைதான் என்றும், பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்

Related posts

உலக சுகாதார நிறுவனத்திலிருந்து விலகுகிறது அமெரிக்கா

மெக்ஸிகோவில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு

எத்தியோப்பியாவில் பயங்கர நிலச்சரிவு – 157 பேர் பலி