கிசு கிசு

எதிர்வரும் 5 நாட்களில் மற்றுமொரு கொத்தணி உருவாகலாம்

(UTV | கொழும்பு) – மினுவாங்கொட கொரோனா கொத்தணி போன்று மற்றுமொரு கொத்தணி ஏற்படும் ஆபத்து உள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகமொன்றுக்கான செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்;

“.. முதல் சுற்றில், மக்கள் உட்பட பலர் கொரோனாவின் கட்டுப்பாட்டை மிகைப்படுத்தியதாகவும், இந்த நிலைமை மற்றொரு அலைக்கு வழிவகுத்தது எனவும் எதிர்வரும் ஐந்து நாட்களில் நாடளாவிய ரீதியாக கொரோனா தொற்றாளர்கள் அதிகமானோர் இனங்காணப்படலாம்.

ஏதோ ஒரு இடத்தில் சிறிய தவறு அல்லது அலட்சியம் ஏற்பட்டுள்ளது. கட்டுநாயக்கவை அடிப்படையாக கொண்டு மற்றுமொரு கொரோனா கொத்தணி ஏற்படும் ஆபத்து உள்ளது. அந்த ஆபத்து நாட்டின் எந்தவொரு பகுதியிலும் எந்த சந்தர்ப்பத்திலும் ஏற்பட கூடும்.

இம்முறை, முதல் முறை போன்று கொரோனாவை கட்டுப்படுத்துவதும் அல்லது கட்டுப்படுத்தாமல் இருப்பதற்கும் மக்களின் செயற்பாடே தீர்மானிக்கவுள்ளது. மக்கள் வழங்கும் ஆதரவிற்கமைய கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு முழுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்..” எனத் தெரிவித்துள்ளார்.

 

  • ஆர்.ரிஷ்மா 

Related posts

இலங்கை மக்களுக்கான மகிழ்ச்சித் தகவல்!!!

MV x’press pearl கப்பலில் கொரோனா கொத்தணி?

ஸ்ரீலங்கன் விமான சேவை இடைநிறுத்தம் : நியாயமற்ற நடவடிக்கை